Aadal Kaaneero

1956
Lyrics
Language: English

Aadal kaaneero …
Aadal kaaneero
Vilaiyaadal kaaneero
Thiruvilaiyaadal kaaneero…
Oo oo oo oo..

Aadal kaaneero

Paadal madhuraiyil raaja savundhira…
Aaaa…aaa…aaa….haaa….aaa…haaa…aa…aa..aaa
Paadal madhuraiyil raaja savundhira
Paandiyanaam engal aandavan
Thiruvilaiyaadal kaaneero… ooo…

Ootru perukkaalae
Ulai koottum vaigaiyennum
Aattru vellam thadukkavae…ae…ae…

Ootru perukkaalae
Ulai koottum vaigaiyennum
Aattru vellam thadukkavae

Veettukkoraal thandhu
Vaendhanin aanai thanai
Veettukkoraal thandhu
Vaendhanin aanai thanai
Yettru vinai mudikkavae

Pettradaiyaadha oru
Vandhiyin kooliyaalaai…
Pillai pettradaiyaadha oru
Vandhiyin kooliyaalaai
Pittukku man sumakkavae vandhu
Pithanai polae
Kai pirambaalae patta adi
Pithanai polae
Kai pirambaalae patta adi
Pesidum sagala jeeva raasigal
Mudhugilum pattu vaduvuttra
Eesan vilaiyaadal kaaneero… ooo…

Nari thanai pariyaakki
Pari thanai nariyaakki
Naaraikku mukthi koduthu…

Nari thanai pariyaakki
Pari thanai nariyaakki
Naaraikku mukthi koduthu…
Uyar naal vaedha porul solli
Naagathaiyum vadhaithu
Uyar naal vaedha porul solli
Naagathaiyum vadhaithu
Narkeerar kubadhaesithu

Varum kula paandiyarkku
Siva logam kaatti
Varum kula paandiyarkku
Siva logam kaatti
Valai veesi meen pidithu
Vaai thiravaadha
Kal yaanaikku karumbootti
Vaai thiravaadha
Kal yaanaikku karumbootti
Vaira valai muthu valai rathna valai
Vittra vilaiyaadal kaaneero

Paadal madhuraiyil raaja savundhira
Paandiyanaam engal aandavan
Thiruvilaiyaadal kaaneero… ooo…


Language: Tamil

எம். எல். வசந்தகுமாரி

ஆடல் காணீரோ
ஆடல் காணீரோ
விளையாடல் காணீரோ
திருவிளையாடல் காணீரோ....
ஓ ஓ ஓ ஓ......

ஆடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர....
ஆஅ.....ஆ....ஆஅ...ஹா....ஆஅ...ஆஅ......ஹா....ஆஅ..ஆ...
பாடல் மதுரையில் ராஜ சௌந்திர....
பாண்டியனாம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..... ஓ...

ஊற்றுப் பெருக்காலே
உலைக் கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே...ஏ....ஏ.....

ஊற்றுப் பெருக்காலே
உலைக் கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே

வீட்டுக்கோர் ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
வீட்டுக்கோர் ஆள் தந்து
வேந்தனின் ஆணை தன்னை
ஏற்று வினை முடிக்கவே

பேற்றடையாத ஒரு
வந்தியின் கூலியாளாய்
பிள்ளைப் பேற்றடையாத ஒரு
வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே
கைப் பிரம்பாலே பட்ட அடி
பித்தனைப் போலே
கைப் பிரம்பாலே பட்ட அடி
பேசிடும் சகல ஜீவராசிகள்
முதுகிலும் பட்டு வலுவூட்ட
ஈசன் விளையாடல் காணீரோ.....ஓ....

நரி தன்னனைப் பரியாக்கி
பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து
உயர் நால் வேதப் பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
உயர் நால் வேதப் பொருள் சொல்லி
நாகத்தையும் வதைத்து
நக்கீரார்க்கு உபதேசித்து

வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வரகுண பாண்டியர்க்கு
சிவலோகம் காட்டி
வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத
கல்யானைக்குக் கரும்பூட்டி
வாய் திறவாத
கல்யானைக்குக் கரும்பூட்டி
வைரவளை முத்துவளை ரத்னவளை
விற்ற விளையாடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ..... ஓ...


Movie/Album name: Madurai Veeran

Movie Summary Madurai Veeran (1956) is a Tamil mythological film about the legendary warrior Veeran, who is abandoned as an infant, raised by a tribal chieftain, and later becomes a commander in the Madurai kingdom, only to face betrayal and tragedy.

Song Credits - Film: Madurai Veeran (1956) - Song: Aadal Kaaneero - Lyricist: Udumalai Narayana Kavi - Music Director: G. Ramanathan

Musical Style Classical Bharatanatyam-based dance song with folk-theatrical elements.

Raga Details - Raga: Vasantha

Key Artists Involved - Singer: M. L. Vasanthakumari - Cast: P. Bhanumathi - Music: G. Ramanathan

Scene Context The song is a dance performance sequence in the court of Madurai, where the heroine (performed by P. Bhanumathi) dances before the king and assembly, showcasing her artistry and grace.


Artists