Jayame Nee Arul

1959
Lyrics
Language: English

Kaaveri paalaaru karai purandoodavae
Paavalarum naavalarum paamaalai soodavae
Chorus : Haa…aaa…a.aa….
Haa….aaa….aa…
Female : Kaaveri paalaaru karai purandoodavae
Paavalarum naavalarum paamaalai soodavae
Kanni thamizh sarathi konjam kalai vaaridhi
Thennaattu thilagamae vaazhga neeyammaa

Moovendhar pugazhndhidavae
Muthamilum vilangidavae
Paavendhar panindhidavae paindhamizhin kalaiyaal
Valluvanai thol ulagam vaazhndhidavae pirandhaai
Vattraadha kalai selvam vaazhga neeyamma

Va. Vo. Chidambaram kumaranaiyum eendraai
Vaiyamae pugazhum kattabommanaiyum thandhaai
Vannamalar padhandhedi vanangi nindromae
Vaan ongum valar mathiyae vaazhga neeyamma


Language: Tamil

கண்டசாலா

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே

காவேரி பாலாறு கரை புரண்டோடவே
பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
பெண் குழு : ஹா ...ஆஅ..ஆஅ....
ஹா ...ஆஅ..ஆஅ....
பெண் : காவேரி பாலாறு கரை புரண்டோடவே
பாவலரும் நாவலரும் பாமாலை சூடவே
கன்னித் தமிழ் சாரதி கொஞ்சும் கலை வாரிதி
தென்னாட்டுத் திலகமே வாழ்க நீயம்மா

ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே

மூவேந்தர் புகழ்ந்திடவே
முத்தமிழும் விளங்கிடவே
பாவேந்தர் பணிந்திடவே பைந்தமிழின் கலையால்
வள்ளுவனை தொல்லுலகம் வாழ்ந்திடவே பிறந்தாய்
வற்றாத கலைச்செல்வம் வாழ்க நீயம்மா

ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே

வ.உ. சிதம்பரம் குமரனையும் ஈன்றாய்
வையமே புகழும் கட்டபொம்மனையும் தந்தாய்
வண்ணமலர் பதந்தேடி வணங்கி நின்றோமே
வானோங்கும் வளர்மதியே வாழ்க நீயம்மா

ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே
செல்வமே நின் சேவை மறவோமே தாயே
ஜெயமே நீ அருள் எங்கள் செந்தமிழ் தாயே


Movie/Album name: Vazhkkai Oppandam

Movie Summary Vazhkkai Oppandam (1959) is a Tamil drama centered on a family navigating life’s struggles, with the song “Jayame Nee Arul” reflecting a prayerful appeal for divine grace and victory.

Song Credits - Song: Jayame Nee Arul - Year: 1959 - Movie/Album: Vazhkkai Oppandam

Musical Style Devotional/patriotic-tinged film song with a prayerful, uplifting tone.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists