Samayapura Aatha

1985
Lyrics
Language: English

Sannidhiyin ullirukkum
Samapura aathaalae
Mandabathil vandhamarndhu
Makkalaithaan kaathaalae

Thaayagha iruppavalae
Thaai vayattril pirandhaalae
Pen malaraai pirappeduthu
Kann malaria thirandhaalae

Samapura aatha
Nee sagalathukkum saatchi
Un sannidhiya paarthaa
Rendu kann kollaadha kaatchi

Samapura aatha
Nee sagalathukkum saatchi
Un sannidhiya paarthaa
Rendu kann kollaadha kaatchi
Chorus : Samapura aatha
Nee sagalathukkum saatchi

Aathaala paarthidathaan
Aayiramaai koodum
Sanam alai alaiyaai modhikittu
Arula vandhae aadum

Aathaala paarthidathaan
Aayiramaai koodum
Sanam alai alaiyaai modhikittu
Arula vandhae aadum
Pamba satham ketkaiyilae
Pullarikkum odambhu
Nalla udukka satham ketkaiyilae
Vedavedakkum narambhu
Chorus : Samapura aatha
Nee sagalathukkum saatchi

Amma en thaayaennu
KAiyendhi kettaal
Yaarukkum illaennu
Ava solla mattaa
Nee sonna vakkukku
Mariyadha koduppaa
Adha neeyum maranthakka
Analaaga kodhippaa

Pala kalam poruppa
Summavae iruppa
Sandharppam varum bothu
Sollaama mudippa

Pala kalam poruppa
Summavae iruppa
Sandharppam varum bothu
Sollaama mudippa

Samayapura aathaa
Chorus : Nee sagalathukkum saatchi
Female : Un sannidhiya paarthaa
Chorus : Rendu kann kollaadha kaatchi

Velliyilae kannu senju
Undiyalil pottaa
Poo vizhundhirukkum vizhigalukkum
Velicham vandhu theriyum

Velliyilae kannu senju
Undiyalil pottaa
Poo vizhundhirukkum vizhigalukkum
Velicham vandhu theriyum

Thappu senja jenmam ellaam
Uppu vanghi pottaa
Senja thappugalum paavangalum
Uppu pola karaiyum

Thappu senja jenmam ellaam
Uppu vanghi pottaa
Senja thappugalum paavangalum
Uppu pola karaiyum


Language: Tamil

: வாணி ஜெயராம்

கே. வி. மஹாதேவன்

வாலி

சந்நிதியின் உள்ளிருக்கும்
சமயபுர ஆத்தாளே
மண்டபத்தில் வந்தமர்ந்து
மக்களைத்தான் காத்தாளே

தாயாக இருப்பவளே
தாய் வயிற்றில் பிறந்தாளே
பெண் மலராய் பிறப்பெடுத்து
கண் மலரை திறந்தாளே

சமயபுர ஆத்தா
நீ சகலத்துக்கும் சாட்சி
உன் சன்னிதியப் பார்த்தா
ரெண்டு கண் கொள்ளாத காட்சி

சமயபுர ஆத்தா
நீ சகலத்துக்கும் சாட்சி
உன் சன்னிதியப் பார்த்தா
ரெண்டு கண் கொள்ளாத காட்சி
குழு : சமயபுர ஆத்தா......
நீ சகலத்துக்கும் சாட்சி.....

ஆத்தாள பார்த்திடத்தான்
ஆயிரமாய் கூடும்
சனம் அலைஅலையா மோதிக்கிட்டு
அருளு வந்தே ஆடும்

ஆத்தாள பார்த்திடத்தான்
ஆயிரமாய் கூடும்
சனம் அலைஅலையா மோதிக்கிட்டு
அருளு வந்தே ஆடும்
பம்ப சத்தம் கேட்கையிலே
புல்லரிக்கும் ஒடம்பு
நல்ல உடுக்க சத்தம் கேட்கையிலே
வெடவெடக்கும் நரம்பு
பம்ப சத்தம் கேட்கையிலே
புல்லரிக்கும் ஒடம்பு
நல்ல உடுக்க சத்தம் கேட்கையிலே
வெடவெடக்கும் நரம்பு
குழு : சமயபுர ஆத்தா......
நீ சகலத்துக்கும் சாட்சி.....

அம்மா என் தாயேன்னு
கையேந்தி கேட்டால்
யாருக்கும் இல்லேன்னு
அவ சொல்ல மாட்டா
நீ சொன்ன வாக்குக்கு
மரியாத கொடுப்பா
அத நீயும் மறந்தாக்க
அனலாக கொதிப்பா

பல காலம் பொறுப்பா
சும்மாவே இருப்பா
சந்தர்ப்பம் வரும் போது
சொல்லாம முடிப்பா
குழு : பல காலம் பொறுப்பா
சும்மாவே இருப்பா
சந்தர்ப்பம் வரும் போது
சொல்லாம முடிப்பா

சமயபுர ஆத்தா......
குழு : நீ சகலத்துக்கும் சாட்சி.....
பெண் : உன் சன்னிதியப் பார்த்தா
குழு : ரெண்டு கண் கொள்ளாத காட்சி...

வெள்ளியிலே கண்ணு செஞ்சு
உண்டியலில் போட்டா
பூ விழுந்திருக்கும் விழிகளுக்கும்
வெளிச்சம் வந்து தெரியும்

வெள்ளியிலே கண்ணு செஞ்சு
உண்டியலில் போட்டா
பூ விழுந்திருக்கும் விழிகளுக்கும்
வெளிச்சம் வந்து தெரியும்

தப்பு செஞ்ச ஜெம்மமெல்லாம்
உப்பு வாங்கி போட்டா
செஞ்ச தப்புகளும் பாவங்களும்
உப்பு போல கரையும்

தப்பு செஞ்ச ஜெம்மமெல்லாம்
உப்பு வாங்கி போட்டா
செஞ்ச தப்புகளும் பாவங்களும்
உப்பு போல கரையும்

சமயபுர ஆத்தா...... ஓம்
நீ சகலத்துக்கும் சாட்சி.....ஓம்
சமயபுர ஆத்தா...... ஓம்
நீ சகலத்துக்கும் சாட்சி.....ஓம்


Movie/Album name: Samayapurathale Satchi

Movie Summary Samayapurathale Satchi is a 1985 Tamil devotional film centered on the power of Goddess Samayapuram Mariamman and the faith of her devotees.

Song Credits - Song: Samayapura Aatha - Film: Samayapurathale Satchi - Year: 1985 - Language: Tamil

Musical Style Devotional folk-style Tamil film song with traditional temple-music influences.

Scene Context The song is a devotional invocation to Goddess Samayapuram Mariamman, sung in praise of the deity within the film’s religious narrative.


Artists