Paarthaya Manidanin

1958
Lyrics
Language: English

Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai
Deva nilaiyaana ulagathaiyum
Neraaana pazhakkathaiyum
Thalaikeezhaai purattividum
Thaarumaaru velaiyai
Paarthaaya maanidanin leelaiyai

Bhaktha janangal kavanam ellaam
Dhinamum kedaikkum sundalilae..haa..haa
Bhaktha janangal kavanam ellaam
Dhinamum kedaikkum sundalilae
Pasiyum sundal rusiyum ponaal
Bhakthiyillai bajanai illai
Suthamaana poligalin sombaeri veshathilae
Suthamaana poligalin sombaeri veshathilae

Thodarnthu undhan kannedhiril
Nadanthu varum mosangalai

Paarthaaya…
Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai

Attam pottu puralvadhu thaan
Aandavnin saevaiyaa
Aalayathai tharisikka alangaaram thevaiya
Aalai aalu idikkaruthum adithadiyum yenaiyaa
Anbar kannu angae moraikkudhu
Kumbidu mattum ingae nadakuthu

Paarthaaya….
Paarthaaya maanidanin leelaiyai
Deva paarthaaya maanidanin leelaiyai

Vinnum mannum neeyaanaai
Veyilum mazhaiyum neeyaanaai
Vilangum agila ulagamidhu
Neeilladha idam yedhu ..haa..haa..
Vinnum mannum neeyaanaai
Veyilum mazhaiyum neeyaanaai
Vilangum agila ulagamidhu
Neeilladha idam yedhu ..

Kaasu thandhaal thaan unnai
Kaanum vazhi kattuvadhaai
Kadhavu pottu pootti veithu
Kattaayam pannuvadhai

Paarthaaya….
Paarthaaya maanidanin leelaiyai
Neraaana pazhakkathaiyum
Thalaikeezhaai purattividum
Thaarumaaru velaiyai
Paarthaaya maanidanin leelaiyai


Language: Tamil

: பி. சுஷீலா

போண்டியாலா ஸ்ரீனிவாஸ்

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா நிலையான உலகத்தையும்
நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும்
தாறுமாறு வேலையை
பார்த்தாயா மானிடனின் லீலையை

பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே...
ஹா...ஹா
பக்த ஜனங்கள் கவனமெல்லாம்
தினமும் கிடைக்கும் சுண்டலிலே...
பசியும் சுண்டல் ருசியும் போனால்
பக்தியில்லை பஜனையில்லை
சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!
சுத்தமான போலிகளின் சோம்பேறி வேஷத்திலே!

தொடர்ந்து உந்தன் கண்ணெதெரில்
நடந்து வரும் மோசங்களை

பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

ஆட்டம் போட்டுப் புரள்வதுதான்
ஆண்டவனின் சேவையா
ஆலயத்தைத் தரிசிக்க அலங்காரம் தேவையா
ஆளை ஆளு இடிக்கறதும் அடிதடியும் ஏனையா
அன்பர் கண்ணு அங்கே மொறைக்குது
கும்பிடு மட்டும் இங்கே நடக்குது

பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
தேவா பார்த்தாயா மானிடனின் லீலையை

விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்
விளங்கும் அகில உலகமிது
நீயில்லாத இடம் ஏது ஹா...ஹா..
விண்ணும் மண்ணும் நீயானாய்
வெயிலும் மழையும் நீயானாய்
விளங்கும் அகில உலகமிது
நீயில்லாத இடம் ஏது

காசு தந்தால்தான் உன்னைக்
காணும்வழி காட்டுவதாய்
கதவு போட்டு பூட்டி வைத்துக்
கட்டாயம் பண்ணுவதைப்........

பார்த்தாயா
பார்த்தாயா மானிடனின் லீலையை
நேரான பழக்கத்தையும்
தலைகீழாய்ப் புரட்டிவிடும்
தாறுமாறு வேலையை
பார்த்தாயா மானிடனின் லீலையை


Movie/Album name: Naan Valartha Thangai

Artists