Oru Devathai

1988
Lyrics
Language: English

Haa…..aaa….aaa…aaa…
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….

Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
En manadhil sogangal theera
Adhil inimai endrendrum saera

Pala pudhiya raagangal paada
Adhil iniya naadhangal kooda

Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Kaattinil poo vaasam
Kaatrodu pogum
Yaettinil ezhudhaadha kavi polae

Kadalinil mazhai neerum
Veenaadhal polae
Ulaginil veenaaga irundhenae

Pan nedum kaalangal
Moodiya arai thannil
Pon vilakkum yaetra
Irul angu vilagaadho

Naan seidha paavangal
Theeraadha ondru
Nee vandhu theerthaayae
En dhevi indru
Anbae en nandri en solvaen

Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu
Azhagiya dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Haa…..aaa….aaa…aaa…
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….
Aaa…aaa…aaa…aaa….

Chandhira oorkolam kanden
Man meedhu
Pen undhan muga nilavu maelae

Penninai nilavaaga
Paarkkindra nenjam
Unmaiyai unaraadhu man maelae

Kaadhalil ularaadha
Kaalaiyum ingaedhu
Kanniyai saeraadha
Vaazhvinil niraivaedhu

Nee sollum vaedhangal
Pudhidhalla anbae
Endraalum pudhidhaaga
Kandaenae ingae
Maaraadhu maaraadhu en anbae

Oru dhevadhai vandhadhu
Mana chirai koondai thirandhu sendradhu

Pala pudhiya raagangal paada
Adhil iniya naadhangal kooda

En manadhil sogangal theera
Adhil inimai endrendrum saera

Oru dhevadhai vandhadhu
Male : Aaa….aaa….aa….aa…
Female : Mana chirai koondai thirandhu sendradhu
Male : Aaa….aaa….aaa….aa…

Oru dhevadhai vandhadhu
Female : Aaa….aaa….aa….aa…
Male : Mana chirai koondai thirandhu sendradhu
Female : Aaa….aaa….aaa….aa…aaa aaaa


Language: Tamil

ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

காட்டினில் பூ வாசம்
காற்றோடு போகும்
ஏட்டினில் எழுதாத கவி போலே

கடலினில் மழை நீரும்
வீணாதல் போலே
உலகினில் வீணாக இருந்தேனே

பன் நெடும் காலங்கள்
மூடிய அறை தன்னில்
பொன் விளக்கும் ஏற்ற
இருள் அங்கு விலகாதோ

நான் செய்த பாவங்கள்
தீராத ஒன்று
நீ வந்து தீர்த்தாயே
என் தேவி இன்று
அன்பே என் நன்றி என் சொல்வேன்

ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
அழகிய தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

ஹா......ஆஅ......ஆஅ......ஆஅ....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....

சந்திர ஊர்கோலம் கண்டேன்
மண் மீது
பெண் உந்தன் முக நிலவு மேலே

பெண்ணினை நிலவாக
பார்க்கின்ற நெஞ்சம்
உண்மையை உணராது மண் மேலே

காதலில் உளறாத
காளையும் இங்கேது
கன்னியைச் சேராத
வாழ்வினில் நிறைவேது

நீ சொல்லும் வேதங்கள்
புதிதல்ல அன்பே
என்றாலும் புதிதாக
கண்டேனே இங்கே
மாறாது மாறாது என் அன்பே

ஒரு தேவதை வந்தது
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது

: பல புதிய ராகங்கள் பாட
அதில் இனிய நாதங்கள் கூட

என் மனதில் சோகங்கள் தீர
அதில் இனிமை என்றென்றும் சேர

ஒரு தேவதை வந்தது
ஆண் : ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....
பெண் : மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
ஆண் : ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....

ஒரு தேவதை வந்தது
பெண் : ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ....
ஆண் : மனச் சிறை கூண்டை திறந்து சென்றது
பெண் : ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ...


Movie/Album name: Naan Sonnathey Sattam

Movie Summary: Naan Sonnathey Sattam (1988) is a Tamil action-drama starring Sathyaraj, about a man who takes the law into his own hands to deliver justice after being let down by the legal system.

Song Credits: - Film: Naan Sonnathey Sattam (1988) - Song: Oru Devathai - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style: Melodic Tamil film duet in Ilaiyaraaja's signature style, blending light classical sensibilities with an easy, romantic film-music arrangement.

Raga Details: The composition is built on a melodic framework close to the Kalyani scale, giving it a bright, lyrical and devotional-romantic colour.

Key Artists Involved: - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - On-screen: Sathyaraj and the film's lead heroine

Scene Context: A romantic duet picturised on the lead pair, expressing admiration and love — the hero likening the heroine to a divine angel ("Oru Devathai").


Artists