
Lyrics by : Mahakavi Bharathiyar
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Male : Gangai nadhi purathu kodhumai pandam
Gangai nadhi purathu kodhumai pandam
Kaaveri vettrilaikku maaru kolvom
Singa marattiyar tham kavidhai kondu
Cherathu thandhangal parisalippom
Singa marattiyar tham kavidhai kondu
Cherathu thandhangal parisalippom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Female : Manasidhi nee kosam manu kada nee kosam
Both : Manasidhi nee kosam manu kada nee kosam
Male : Mamadhaa vaedham mayani madhu paasam
Both : Mamadhaa vaedham mayani madhu paasam
Manasidhi nee kosam manu kada nee kosam
Chorus : Haa..aaaa…
Male : Nee kann kanaragam
Female : Nee madhi anuraagam
Male : Mana ee vaibogam
Female : Baguthan alaiyogam
Male : Valapula ullaasam
Female : Narapula dharahasam
Male : Vahithina avagaasam
Female : Saa nalivulu aavesam
Both : Haa.aaa..haa..aaa..haa..aaa…
Hmm mm mm
Male : Singala theevinikoor paalam amaippom
Sedhuvai medu uruthi veedhi amaippom
Singala theevinikoor paalam amaippom
Sedhuvai medu uruthi veedhi amaippom
Vangathil odi varum neerin migaiyaal
Maiyathu naadugalil payir seiyuvom
Vangathil odi varum neerin migaiyaal
Maiyathu naadugalil payir seiyuvom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Chorus : Haaa..aaa…
பாடல் ஆசிரியர் : மஹாகவி பாரதியார்
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரன நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரன நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரன நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
பெண் : மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்
இருவர் : மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்
ஆண் : மமதா அவேதம் மாயனி மதுபாசம்
இருவர் : மமதா அவேதம் மாயனி மதுபாசம்
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்
குழு : ஹா..ஆஆ….
ஆண் : நீ கண் கனராகம்
பெண் : நீ மதி அனுராகம்
ஆண் : மன ஈ வைபோகம்
பெண் : பகுதன் அலையோகம்
ஆண் : வளபுல புகுலாசம்
பெண் : நிரபுல தேராசம்
ஆண் : வஹிதின அவகாசம்
பெண் : சா நலிவுலு ஆவேசம்
இருவர் : ஹா..ஆஆ..ஆ…ஆஅ…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்
ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரன நாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்
குழு : ஹா..ஆஆ….
Movie Summary: Kai Kodutha Deivam (1964) is a Tamil drama about a devoted wife who faces hardship and separation from her husband due to misunderstandings and circumstance, ultimately reaffirming faith, love, and divine justice.
Song Credits:
Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style: Traditional Tamil film song with classical Carnatic influence, orchestrated in the melodic style typical of 1960s Tamil cinema.
Raga Details: Not available.
Key Artists Involved:
Actors: Sivaji Ganesan, Savitri (likely picturized on them)
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.