Panamethan Jeevanaadi

1955
Lyrics
Language: English

Hmmm mmmm
Arul illarkku avvulagamillai
Porul illarkku ivvulagamillai
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Padhaviyin aasaiyaalae
Pal perai mosam seidhu
Pagal vesha mainar ellaam
Sugamaaga vaazhndhidavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Uttraarum uravinarum
Vandhu soozhavum
Uyiraana manaivi makkal
Serndhu vaazhavum
Kattraarellaam saattru
Kavigal paadavum
Kakkaa kootangal ellaam
Amaam podavum
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi

Jaladhosam pidichavan pol
Thalaiyai kanathidum
Salaesuram kangal pol
Paarvai maaridum

Pazhaiya nilaiyai marandhu
Melae parakka seidhidum
Pazhaiya kanjiyai marandhu
Summa badham geeril neendhidavae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi
Bagavanae kelaiyaa pachondhi ulagilae
Panamae thaan jeeva naadi
Ulagil panamae thaan jeeva naadi


Language: Tamil

:  பி. லீலா

எஸ். வி. வெங்கட்ராமன்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஹ்ம்ம் ..ஹ்ம்ம்..
அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......

பதவியின் ஆசையாலே
பல பேரை மோசம் செய்து
பகல் வேஷ மைனரெல்லாம்
சுகமாக வாழ்ந்திடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி......

உற்றாரும் உறவினரும் வந்து சூழவும்
உயிரான மனைவி மக்கள் சேர்ந்து வாழவும்
கற்றாரெல்லாம் சாற்றுக் கவிகள் பாடவும்
காக்கா கூட்டங்களெல்லாம் ஆமாம் போடவும்
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி......

ஜலதோஷம் பிடிச்சவன் போல்
தலையைக் கனத்திடும்
சாளேசுரம் கண்கள் போல்
பார்வை மாறிடும்..

பழைய நிலையை மறந்து
மேலே பறக்கச் செய்திடும்
பழைய கஞ்சியை மறந்து சும்மா
பாதாம்கீரில் நீந்திடவே

பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே
பணமேதான் ஜீவ நாடி
உலகில் பணமேதான் ஜீவ நாடி.......


Movie/Album name: Kodeeswaran

Artists