Anbe Endhan

1957
Lyrics
Language: English

Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae

Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae

Inthaa inthaa vaazhvilae
Illara inbam ennaalae
Endrae sollum mohana paarvaiyilae

Inthaa inthaa vaazhvilae
Illara inbam ennaalae
Endrae sollum mohana paarvaiyilae

Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae

Ennai andru igazhnthavarindru
Ennam maariyathaeno
Ennai andru igazhnthavarindru
Ennam maariyathaeno

Kannin vazhiyae kannigai unthan
Ullam therinthathanaalae
Kannin vazhiyae kannigai unthan
Ullam therinthathanaalae

Minnum ponnai piththalai endru
Munnae sonnathu yaeno
Minnum ponnai piththalai endru
Munnae sonnathu yaeno

Mannil ponnum kalanthu maranthu
Mangi kidanthathanaalae
Mannil ponnum kalanthu maranthu
Mangi kidanthathanaalae

Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae

Pangaja vadhanam marnthaal pothum
Pasiyum udanae theerum
Pangaja vadhanam marnthaal pothum
Pasiyum udanae theerum

Kunguma idhazhum kuvinthaal pothum
Nenjil aasai meerum
Kunguma idhazhum kuvinthaal pothum
Nenjil aasai meerum

Mangaiyai aangal pugazhnthaal pothum
Manamum udane maarum
Mangaiyai aangal pugazhnthaal pothum
Manamum udane maarum

Maampazha kannam sivanthaal pothum
Madhuvum adhilae oorum
Maampazha kannam sivanthaal pothum
Madhuvum adhilae oorum

Anbe enthan munnaalae
Aasaiyai pesum kannaalae
Thanthaai inbam thaen polae vaazhvinilae


Language: Tamil

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகனப் பார்வையிலே

இந்தா இந்தா வாழ்விலே
இல்லற இன்பம் என்னாலே
என்றே சொல்லும் மோகனப் பார்வையிலே

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

என்னை அன்று இகழ்ந்தவரின்று
எண்ணம் மாறியதேனோ
என்னை அன்று இகழ்ந்தவரின்று
எண்ணம் மாறியதேனோ

கண்ணின் வழியே கன்னிகை உந்தன்
உள்ளம் தெரிந்ததனாலே
கண்ணின் வழியே கன்னிகை உந்தன்
உள்ளம் தெரிந்ததனாலே

மின்னும் பொன்னை பித்தளை என்று
முன்னே சொன்னது ஏனோ
மின்னும் பொன்னை பித்தளை என்று
முன்னே சொன்னது ஏனோ

மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கிக் கிடந்ததனாலே......
மண்ணில் பொன்னும் கலந்து மறைந்து
மங்கிக் கிடந்ததனாலே......

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே

பங்கஜ வதனம் மலரந்தால் போதும்
பசியும் உடனே தீரும்
பங்கஜ வதனம் மலரந்தால் போதும்
பசியும் உடனே தீரும்

குங்கும இதழும் குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீறும்
குங்கும இதழும் குவிந்தால் போதும்
நெஞ்சில் ஆசை மீறும்

மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்
மங்கையை ஆண்கள் புகழ்ந்தால் போதும்
மனமும் உடனே மாறும்

மாம்பழக் கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊறும்.....
மாம்பழக் கன்னம் சிவந்தால் போதும்
மதுவும் அதிலே ஊறும்.....

அன்பே எந்தன் முன்னாலே
ஆசையைப் பேசும் கண்ணாலே
தந்தாய் இன்பம் தேன் போலே வாழ்வினிலே


Movie/Album name: Aaravalli

Movie Summary Aaravalli is a 1957 Tamil film starring Sivaji Ganesan and Padmini, revolving around themes of devotion, love, and sacrifice set against a mythological backdrop.

Song Credits - Song: Anbe Endhan - Film: Aaravalli (1957) - Lyricist: Ku. Ma. Balasubramaniam (Kambadasan) - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic duet in the traditional Tamil film music idiom of the 1950s, blending light classical and devotional phrasing with orchestral accompaniment typical of G. Ramanathan's compositions.

Raga Details Based on a pleasing melodic scale with traces of Mohanam and Suddha Dhanyasi phrases, though not a strict classical raga-based composition.

Key Artists Involved - Actors: Sivaji Ganesan, Padmini - Music: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Scene Context A romantic duet featuring the lead pair, expressing love and emotional bonding, picturized on Sivaji Ganesan and Padmini.


Artists