
Female : Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Kanavinilaenum thalaivanai kaana
Kannae nee urangu
Avan kaatchiyai nee vazhangu
Kaatchiyai nee vazhangu….mmm…..
Female : Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Kanavinilaenum thalaivanai kaana
Kannae nee urangu
Avan kaatchiyai nee vazhangu
Kaatchiyai nee vazhangu….mmm…..
Female : Thalaiyinil sooda
Malarsaram kettaen
Mul mudi sootti vaiththaai
Thalaiyinil sooda
Malarsaram kettaen
Mul mudi sootti vaiththaai
Karangalil poda valaigalai kettaen
Vilanginai pootti vaiththaai
Vilanginai pootti vaiththaai
Male : Kadalukkukkooda karai irukkum
Antha alaigalai thadupatharkku
Manthukku mattum karai illaiyae
Intha ninaivinai thadupatharkku
Ninaivinai thadupatharkku
Male : Vizhiyo urangavillai
En manathil amaithiyillai
Female : Uravinaikaatti pirinthavar pol
Ingu pagaivargal yaarum illai
Oliyinai thanthu vizhigalai ketpathu
Yaarukkum niyaayam illai
Male : Bhoomiyai vaanam thoduvathu pol
Ingu paarvaiyil therigirathu
Purinthu kollaamal irukkum varaai
Ellaam mayakkamaai irukkukirathu
Mayakkamaai irukirathu
Female : Vizhiyo urangavillai
Oru kanavo varavumillai
Male : Kanavo varavumillai
பெண் : விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
கனவினிலேனும் தலைவனைக் காண
கண்ணே நீ உறங்கு
அவன் காட்சியை நீ வழங்கு
காட்சியை நீ வழங்கு…….ம்ம்ம்…..
ஆண் : விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம்
கண்ணே நீ உறங்கு
அவள் காட்சியை நீ மறந்து
காட்சியை நீ மறந்து……ம்ம்ம்…….
பெண் : தலையினில் சூட
மலர்ச்சரம் கேட்டேன்
முள் முடி சூட்டி வைத்தாய்
தலையினில் சூட
மலர்ச்சரம் கேட்டேன்
முள் முடி சூட்டி வைத்தாய்
கரங்களில் போட வளைகளை கேட்டேன்
விலங்கினை பூட்டி வைத்தாய்
விலங்கினை பூட்டி வைத்தாய்
ஆண் : கடலுக்குக்கூட கரை இருக்கும்
அந்த அலைகளை தடுப்பதற்கு
மனதுக்கு மட்டும் கரை இல்லையே
இந்த நினைவினை தடுப்பதற்கு
நினைவினை தடுப்பதற்கு
ஆண் : விழியோ உறங்கவில்லை
என் மனதில் அமைதியில்லை
பெண் : உறவினைக்காட்டி பிரிந்தவர் போல்
இங்கு பகைவர்கள் யாரும் இல்லை
ஒளியினை தந்து விழிகளை கேட்பது
யாருக்கும் நியாயம் இல்லை
ஆண் : பூமியை வானம் தொடுவது போல்
இங்கு பார்வையில் தெரிகிறது
புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை
எல்லாம் மயக்கமாய் இருக்கிறது
மயக்கமாய் இருக்கிறது…
பெண் : விழியோ உறங்கவில்லை
ஒரு கனவோ வரவுமில்லை
ஆண் : கனவோ வரவுமில்லை
Movie Summary Nee Vazha Vendum (1977) is a Tamil drama about a loving wife who faces hardship and sacrifice after her husband loses his eyesight, centering on family bonds, devotion, and eventual restoration.
Song Credits - Song: Vizhiyo Urangavilla - Movie: Nee Vazha Vendum - Year: 1977 - Lyricist: Kannadasan - Composer: M. S. Viswanathan - Singer: P. Susheela
Musical Style Melancholic Tamil film melody with a devotional-classical flavor, built on a slow, expressive gait suited to pathos and emotional introspection.
Raga Details Shivaranjani
Key Artists Involved - M. S. Viswanathan (Music) - Kannadasan (Lyrics) - P. Susheela (Playback Singer)
Scene Context The song is a sorrowful soliloquy expressing the heroine’s sleepless anguish and inner suffering amid her family’s troubles.