Amma Thulasi Unma

1958
Lyrics
Language: English

Female : Amma thulasi unmaiyin arasi
Anaithum unadharulamma
Amma thulasi unmaiyin arasi
Anaithum unadharulamma
Amma thulasi unmaiyin arasi

Female : Akilamum neeyae aadhiyum neeyae
Aandarulvaaye anbennum thaayae
Nadhimum en vaazhvil nilaiyaana thaayae
Ninaivilum kanavilum neeye thunai

Female : Amma thulasi unmaiyin arasi
Anaithum unadharulamma
Amma thulasi unmaiyin arasi

Female : Maanamum penmaiyum kula panbum ponga
Thaen mozhi selvanai thaalatti konja
Maanamum penmaiyum kula panbum ponga
Thaen mozhi selvanai thaalatti konja
Mangala naanum manjalum vaazha
Manairul neengi magindhendrum vaazha
Mangala naanum manjalum vaazha
Manairul neengi magindhendrum vaazha
Vazhi purivaai jothi neeyae thunai….

Female : Amma thulasi unmaiyin arasi
Anaithum unadharulamma
Amma thulasi unmaiyin arasi
Anaithum unadharulamma
Amma thulasi ……


Language: Tamil

பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி

பெண் : அகிலமும் நீயே ஆதியும் நீயே
ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
நினைவிலும் கனவிலும் நீயே துணை

பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி

பெண் : மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன்மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன்மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
வழி புரிவாய் ஜோதி நீயே துணை!

பெண் : அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா
அம்மா துளசி


Movie/Album name: Naan Valartha Thangai

Movie Summary Naan Valartha Thangai (1958) is a Tamil family drama centered on the deep bond between a brother and the sister he raised, exploring themes of familial duty, sacrifice, and separation.

Song Credits - Song: Amma Thulasi Unma - Film: Naan Valartha Thangai (1958) - Language: Tamil

Musical Style A devotional/emotional melody in the traditional Tamil film style of the 1950s, blending light classical phrasing with folk-tinged devotional expression.

Scene Context The song is a devotional piece addressed to the tulasi plant and the mother figure, expressing reverence and prayerful sentiment, fitting the film's emotionally charged family-devotional moments.


Artists