Kan Imaikaiyil

2025
Lyrics
Language: English

Kann imaikkaiyil

Undhan udan sera
Kannil uraiyaada
Pogum vazhiyellaam
Undhan kai korkka

Sollum siru nenjil
Kaayam vaduvaaga
Kannil karaindhodum
Kanneerum karaiyaaga

Yeno en nenjil
Nee ingu nilaiyaanaai
Megham pol thoovum
Neer thuliyaanaai

Thedum en vaazhvil
Badhil illaa varamaanaai
Endhan udan sera
En vasam aanaai

Kan imaikaiyil en manadhinai
Un idhayathil nuzhaithidanum
En valigalil un tholinil
Naan saaindhidanum

Uyir nilaithidum or ulaginai
Namm vaazhvinil sedhukidanum
Un idhazhinil or punnagai
Naan porthidanum

Unai theendathaanae
Udan sellum nizhaalaai than
Nilavum kadhai solla
Nilaiyaagiradho

Vidai ketka thaane
Balamilla paravai thaane
Unai alli yeno
Sumai thaangidudho

Yaar ariyaadha en ulagil
Or azhagaai nee nindrida
Vaan pozhiyum vinmeen mazhaiyil
Or udalaai naam maarida

Dhinam thedum varam kooda
Vazhi thedum unai sera
Karam korkkum vidhiyin
Naal arugae

Valaindhodum nadhi neerum
Thadai thaandi kadal sera
Unai ennai udan serkkum
Adhuvae

Undhan udan sera
Kannil uraiyaada
Pogum vazhiyellam
Undhan kai korkka

Sollum siru nenjil
Kaadhal valuvaagha
Kannil karaindhodum
Kannerrum vidhaiyaaga

Yeno en nenjil
Nee ingu nilaiyaanaai
Megham pol thoovum
Neer thuliyaanaai

Thedum en vaazhvil
Badhil illaa varamaanaai
Endhan udan sera
En vasam aanaai

Kan imaikaiyil en manadhinai
Un idhayathil nuzhaithidanum
En valigalil un tholinil
Naan saaindhidanum

Uyir nilaithidum or ulaginai
Namm vaazhvinil sedhukidanum
Un idhazhinil or punnagai
Naan porthidanum

Unai theendathaanae
Udan sellum nizhaalaai than
Nilavum kadhai solla
Nilaiyaagiradho

Vidai ketka thaane
Balamilla paravai thaane
Unai alli yeno
Sumai thaangidudho


Language: Tamil

ஸ்ரீ கிருஷ்

ராம் ஜி

கண் இமைக்கையில்

உந்தன் உடன் சேர
கண்ணில் உரையாட
போகும் வழியெல்லாம்
உந்தன் கை கோர்க்க

சொல்லும் சிறு நெஞ்சில்
காயம் வடுவாக
கண்ணில் கரைந்தோடும்
கண்ணீரும் கரையாக

ஏனோ என் நெஞ்சில்
நீ இங்கு நிலையானாய்
மேகம் மேல் தூவும்
நீர் துளியானாய்

தேடும் என் வாழ்வில்
பதில் இல்லா வரமானாய்
எந்தன் உடன் சேர
என் வசமானாய்

கண்ணிமைக்கயில் என் மனதினை
உன் இதயத்தில் நுழைத்திடனும்
என் வலிகளில் உன் தோளினில்
நான் சாய்ந்திடனும்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை
நம் வாழ்வினில் செதுக்கிடனும்
உன் இதழினில் ஓர் புன்னகை
நான் போர்த்திடனும்

உனை தீண்டத்தானே
உடன் செல்லும் நிழலாய் தான்
நிலவும் கதை சொல்ல
நிலையாகிறதோ

விடை கேட்க தானே
பலமில்லா பறவை தான்
உனை அள்ளி ஏனோ சுமை
தாங்கிடுதோ

யார் அறியாத என் உலகில்
ஓர் அழகாய் நீ நின்றிட
வான் பொழியும் விண்மீன் மழையில்
ஓர் உடலாய் நாம் மாறிட

தினம் தேடும் வரம் கூட
வழி தேடும் உனை சேர
கரம் கோர்க்கும் விதியின்
நாள் அருகே

வளைந்தோடும் நதி நீரும்
தடை தாண்டி கடல் சேர
உனை என்னை உடன் சேர்க்கும்
அதுவே

உந்தன் உடன் சேர
கண்ணில் உரையாட
போகும் வழியெல்லாம்
உந்தன் கை கோர்க்க

சொல்லும் சிறு நெஞ்சில்
காதல் வலுவாக
கண்ணில் கரைந்தோடும்
கண்ணீரும் விதையாக

ஏனோ என் நெஞ்சில்
நீ இங்கு நிலையானாய்
மேகம் மேல் தூவும்
நீர் துளியானாய்

தேடும் என் வாழ்வில்
பதில் இல்லா வரமானாய்
எந்தன் உடன் சேர என் வசமானாய்

கண்ணிமைக்கயில் என் மனதினை
உன் இதயத்தில் நுழைத்திடனும்
என் வலிகளில் உன் தோளினில்
நான் சாய்ந்திடனும்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை
நம் வாழ்வினில் செதுக்கிடனும்
உன் இதழினில் ஓர் புன்னகை
நான் போர்த்திடனும்

உனை தீண்டத்தானே
உடன் செல்லும் நிழலாய் தான்
நிலவும் கதை சொல்ல
நிலையாகிறதோ

விடை கேட்க தானே
பலமில்லா பறவை தான்
உனை அள்ளி ஏனோ
சுமை தாங்கிடுதோ


Movie/Album name: Album Songs 2025

Artists