
Male : Mugathil mugam paarkkalaam
Male : Mugathil mugam paarkkalaam
Viral nagathil pavazhathin niram paarkkalaam
Mugathil mugam paarkkalaam
Viral nagathil pavazhathin niram paarkkalaam
Mugathil mugam paarkkalaam
Male : Vagutha karunkuzhalai
Mazhai mugil ena chonnaal
Aaahaaaa….aaa…aa…
Vagutha karunkuzhalai
Mazhai mugil ena chonnaal
Malarinai idhazhodu
Inai saerkkalaam
En mun valaindhu ilam thendralil
Midhandhu varum kaigalil
Valaiyalin isai kaetkalaam
Valaindhu ilam thendralil
Midhandhu varum kaigalil
Valaiyalin isai kaetkalaam
Maanae un mugathil mugam paarkkalaam
Female : Igathil irukkum sugam
Ethanai aanaalum
Iruvarkkum podhuvaakkalaam
Anbae igathil irukkum sugam
Ethanai aanaalum
Iruvarkkum podhuvaakkalaam
Anbae adhan ennikkai virivaakkalaam
Kaadhal agathinil alai modhum
Aasaiyilae inbam
Agathinil alai modhum
Aasaiyilae inbam
Aayiram uruvaakkalaam
Inbam aayiram uruvaakkalaam
Male : Ilamai pongum angam sindhum
Azhagil thangam mangum nilaiyai
Female : Ingu thannai marandhu
Ennam kalandhu
Vanna thogai mayil anna solaigalai
Male : Ulavalaam
Female : Magizhalaam
Male : Kalaiyalaam
Female : Pazhagalaam
Both : Sadhangaiadhu kulungi nagaithida
Varambu kadandhidum
Kurumbu kalandhidum
Mugathil mugam paarkkalaam
Male : Viral nagathil pavazhathin niram paarkkalaam
Mugathil mugam paarkkalaam
ஆண் : முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆண் : முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
ஆண் : வகுத்த கருங்குழலை
மழை முகில் எனச் சொன்னால்
ஆஹா……ஆஅ……ஆ….
வகுத்த கருங்குழலை
மழை முகில் எனச் சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம்
என் முன் வளைந்து இளந் தென்றலில்
மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில்
மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
மானே உன் முகத்தில் முகம் பார்க்கலாம்
பெண் : இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அன்பே இகத்தில் இருக்கும் சுகம்
எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அன்பே அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்
காதல் அகத்தினில் அலைமோதும்
ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும்
ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
இன்பம் ஆயிரம் உருவாக்கலாம்
ஆண் : இளமை பொங்கும் அங்கம் சிந்தும்
அழகில் தங்கம் மங்கும் நிலையில்
பெண் : இங்கு தன்னை மறந்து
எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைகளை
ஆண் : உலவலாம்
பெண் : மகிழலாம்
ஆண் : கலையலாம்
பெண் : பழகலாம்
இருவர் : சதங்கையது குலுங்கி நகைத்திட
வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம்
ஆண் : விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
Movie Summary
Thanga Padhumai (1959) is a Tamil historical film starring Sivaji Ganesan and Padmini, centered on a royal conflict involving love, disguise, sacrifice, and restoration of rightful rule.
Song Credits
- Song: Mugatthil Mugam Parkkalam
- Film: Thanga Padhumai
- Year: 1959
- Lyricist: Kannadasan
- Music Director: Viswanathan–Ramamoorthy
- Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style
Tamil film duet with classical-based melodic phrasing, orchestral accompaniment, and expressive romantic delivery characteristic of late-1950s Tamil cinema music.
Raga Details
Based on Simhendramadhyamam.
Key Artists Involved
- Sivaji Ganesan
- Padmini
- Kannadasan
- Viswanathan–Ramamoorthy
- T. M. Soundararajan
- P. Susheela
Scene Context
A romantic duet picturized on Sivaji Ganesan and Padmini, expressing mutual admiration and love through poetic visual and lyrical exchanges.