
Saagaavaram pol sogam undo
Kelaai mannaa
Chorus : Kelaai mannaa
Male : Theeraa kadhaiyai ketpaar undo
Kelaai manna
Chorus : Kelaai mannaa
Kaniyar kaniththa kanakku padi
Naam kaanum ulagithu vatta paanthaam
Chorus : Vatta panthaam….oo….vatta panthaam…oohho…
Vatta panthai vattamadikkum mattra panthum
Pogum maandae
Chorus : Pogum maandae…..oho…..pogum maandae….oohho…
Maala oliyaam nyaayirum kooda
Mattror yugaththil pogum karinthae
Chorus : Yae….yae…yae…..
Karinthu erinthum vediththa pinnum
Kodhikkum kuzhambil uyirgal mulaikkum
Mulaiththum murinthum thulirkkum vaazhai
Than maranaththulae vittathu vithaiyae…ee….
Chorus : Kelaai mannaa…ohhoi
Viththaiththidum mei pol
Oru uyirai uyirththu vilangum
En kavithai vilangum
Chorus : Kavithai vilangum
Vizhungi thulangidum vamsam vaazha
Vaazhum naalil kadamai seiyya
Seiyyul pol oru kadhal vendum
Chorus : Kadhal vendum
Male : Seiyyul pol oru
Chorus : Kadhal vendum….oohho….
Vendiyathellaam vaaiththa oruvan
Saavaiyum vendi seththa kadhaigal aayiram undu
Chorus : Kelaai mannaa….ooo….
Male : Oo…..oo….kelaai mannaa…..
டி. எஸ். ஐயப்பன் மற்றும் ஜிப்ரான்
சாகாவரம் போல் சோகம் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா
ஆண் : தீராக் கதையை கேட்பார் உண்டோ
கேளாய் மன்னா
குழு : கேளாய் மன்னா
கணியர் கணித்த கணக்கு படி நாம்
காணும் உலகிது வட்ட பந்தாம்
குழு : வட்ட பந்தாம்.....ஓ.....வட்ட பந்தாம்.....ஓஹ்ஹோ....
வட்ட பந்தை வட்டமடிக்கும் மற்ற பந்தும்
போகும் மாண்டே
குழு : போகும் மாண்டே.....ஓஹோ.....போகும் மாண்டே.....ஓஹ்ஹோ....
மாளா ஒளியாம் ஞாயிரும் கூட
மற்றோர் யுகத்தில் போகும் கரிந்தே....
குழு : ஏ.....ஏ.......ஏ.......
கரிந்து எரிந்தும் வெடித்த பின்னும்
கொதிக்கும் குழம்பில் உயிர்கள் முளைக்கும்
முளைத்தும் முறிந்தும் துளிர்க்கும் வாழை
தன் மரணத்துள்ளே விட்டது விதையே....ஈ....
குழு : கேளாய் மன்னா....ஓஹ்ஹோய்
விதைத்திடும் மெய் போல்
ஒரு உயிரை உயிர்த்து விளங்கும்
என் கவிதை விளங்கும்
குழு : கவிதை விளங்கும்
விழுங்கி துலங்கிடும் வம்சம் வாழ
வாழும் நாளில் கடமை செய்ய
செய்யுள் போல் ஒரு காதல் வேண்டும்
குழு : காதல் வேண்டும்
ஆண் : செய்யுள் போல் ஒரு
குழு : காதல் வேண்டும்......ஓஹ்ஹோ.....
வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன்
சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு
குழு : கேளாய் மன்னா....ஓஒ.....
ஆண் : ஓ.....ஓ....கேளாய் மன்னா.....
Movie Summary Uttama Villain is a 2015 Tamil meta-drama about an aging superstar, Manoranjan, who is secretly dying of brain cancer and wishes to end his career with a film that blends the ancient story of the immortal Uttama Villain with his own life, while reconciling with his past.
Song Credits - Song: Saagaavaram Pol - Film: Uttama Villain (2015) - Composer: Ghibran - Singers: Kamal Haasan, Subbu Arumugam - Lyricist: Kamal Haasan - Label: Think Music India
Musical Style A theatrical, folk-inspired Villupaattu-style piece with spoken-word storytelling, traditional percussion, and a dramatic, narrative-driven structure.
Raga Details Not available.
Key Artists Involved - Kamal Haasan (vocals, lyrics, lead actor) - Ghibran (music director) - Subbu Arumugam (vocals, Villupaattu artist)
Scene Context The song appears in the film’s climax, where Manoranjan, in the guise of the immortal Uttama Villain, performs a Villupaattu narrative that reflects on life, death, and legacy before his final moments.